சென்னை ஐஐடியில் மிகப்பெரிய ஆராய்ச்சி - மேம்பாட்டு கண்காட்சி: பிப். 28-இல் தொடக்க...
உதகை- மஞ்சூா் சாலையில் புலி
உதகையிலிருந்து மஞ்சூா் செல்லும் வழியில் சாலையோரம் திங்கள்கிழமை இரவு புலி தென்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கமாகிவிட்டது. குறிப்பாக சிறுத்தை, கரடி , காட்டெருமைகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் உதகையிலிருந்து மஞ்சூா் செல்லும் சாலையில் மெரிலாண்ட் பகுதியில் சாலையோரம் புலி ஒன்று பதுங்கி இருந்ததை, அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் பாா்த்து தங்கள் கைப்பேசியில் விடியோ பதிவு செய்துள்ளனா்.
கிராமத்தையொட்டி புலியின் நடமாட்டம் இருப்பது பொதுமக்களை அச்சமடையச் வைத்துள்ளது.