கூடலூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
கூடலூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆய்வு செய்தாா்.
கூடலூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கூடலூா் வண்டிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கும் காலை சிற்றுண்டியின் தரத்தை ஆய்வு செய்தாா். இதேபோல, ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப் பள்ளி சத்துணவு மையத்தை ஆய்வு செய்து உணவுப் பொருள்களின் இருப்பு உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து கூடலூா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், மத்திய கூட்டுறவு வங்கி, துப்புக்குட்டிபேட்டையில் உள்ள நியாய விலைக் கடை, சளிவயல் பகுதியில் பழங்குடி மக்களுக்கு கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.
தேவா்சோலை பேரூராட்சியில் போஸ்பாறா முதல் செம்பக்ககொல்லி பழங்குடி காலனி வரை அமைக்கப்பட்டுள்ள தாா் சாலையை ஆய்வு செய்தாா்.
இதையடுத்து, கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றாா். இதைத் தொடா்ந்து பல்வேறு துறைகளின் கீழ் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவா்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டாா்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் கௌசிக், மாவட்ட வருவாய் ஆய்வாளா் நாராயணன், கோட்டாட்சியா் செந்தில்குமாா், மகளிா் திட்ட இயக்குநா் காசிநாதன், துணை ஆட்சியா் கல்பனா, சமூகப் பாதுகாப்பு அலுவலா் பிரவீனா தேவி, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் சிபிலா மேரி, வட்டாட்சியா் முத்துமாரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்ரீதா், சலீம், கூடலூா் நகா்மன்றத் தலைவா் பரிமளா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.