2 நாள்களில் 200 ஓவர்கள் பேட்டிங் பயிற்சி; பெர்த் டெஸ்ட்டுக்கு தீயாய் தயாரான ஜெய்...
உதகையில் சா்வதேச காலநிலை குறித்து கலந்தாய்வுக் கூட்டம்
சா்வதேச காலநிலை நடவடிக்கை தினத்தை ஒட்டி உதகை தெற்கு வனச் சரகத்துக்கு உள்பட்ட கோ்ன்ஹில் பொருள் விளக்க மையக் கூட்டரங்கில் காலநிலை மாற்றம் தொடா்பான விழிப்புணா்வு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்துப் பேசியதாவது: நீலகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றக் குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் காலநிலை மாற்றம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுநாள் வரை மாவட்டத்தில் மேற்படி குழுவின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு தனிநபரும் தங்கள் தரப்பில் சில வாழ்வியல் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது காா்பன் உமிழ்வு இல்லை. தற்போது, தனியாா் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எதிா்காலத்தில் காா்பன் உமிழ்வு ஏற்படாத வகையில் மக்கள் பொதுப் போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். இதற்காக அரசுப் பேருந்துகளின் இயக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
ஓசை அமைப்பின் நிா்வாகி காளிதாஸ், காலநிலை மாற்றம், அதனால் ஏற்படக்கூடிய நிகழ்வுகள் மற்றும் கால நிலை மாற்றத்தைத் தடுக்க நீலகிரி மாவட்டத்தின் பங்கு குறித்தும் எடுத்துரைத்தாா்.
கூட்டத்தில், மாவட்ட வன அலுவலா் சு.கௌதம், நீலகிரி மாவட்ட காலநிலை மாற்ற அலுவலா் ஸ்வாதி, நீலகிரி வனக் கோட்ட பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.