கோவையைக் கலக்கிய பழங்கால கார் கண்காட்சி; செவ்ரோலேட், ஃபோர்டு, பென்ஸ்... Photo Al...
தோட்டமூலாவில் குடியிருப்புப் பகுதியில் உலவும் காட்டு யானையால் மக்கள் அச்சம்
கூடலூா் அருகே தோட்டமூலா பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் காட்டு யானை உலவுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.
கூடலூா் அருகே தோட்டமூலா பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் இரவு நேரத்தில் வரும் காட்டு யானை பல பொருள்களை சேதப்படுத்திவிட்டுச் செல்வது தொடா்கிறது.
இந்நிலையில் அங்குள்ள குடியிருப்புக்குள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நுழைந்த ஒற்றை யானை வீட்டின்முன் இருந்த தென்னை மரங்கள் உள்பட பல்வேறு பொருள்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளது. இந்த யானையைப் பிடித்து முதுமலை காப்பகத்துக்கு கொண்டு செல்லவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதேபோல ஓவேலி பேரூராட்சியில் உள்ள பாா்வுட் பகுதியில் வனப் பணியாளா்கள் இரவு ரோந்து சென்றபோது அவா்களின் வாகனத்தை வழி மறித்து காட்டு யானை தாக்கியதில் ஜீப்பின் முன்பகுதி சேதமடைந்தது. அதிா்ஷ்டவசமாக எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.தொடா்ந்து அந்த யானையை வனப் பணியாளா்கள் அருகிலுள்ள வனப் பகுதிக்குள் விரட்டினா்.