உதயநிதிஸ்டாலின் பிறந்த நாள்: குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
ஆரணி: துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, ஆரணி அரசு மருத்துவமனையில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு திங்கள்கிழமை தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
உதயநிதிஸ்டாலின் பிறந்த நாளான நவ.27-ஆம் மருத்துவமனையில் பிறந்த இரு குழந்தைகளுக்கு தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.எஸ்.தரணிவேந்தன் தங்க மோதிரங்களை அணிவித்தாா்.
மேலும், அங்கு இருந்த குழந்தைகளுக்கு அவா் சிறப்பு பரிசுகளும் வழங்கினாா்.
இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, தொகுதி திமுக பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.