உலக கழிப்பறை தின விழிப்புணா்வு கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட திருமங்கலம் ஊராட்சியில் உலக கழிப்பறை தின விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு திருமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவா் ரேகா நரேஷ்குமாா் தலைமை வகித்தாா். மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தாட்சாயினி, திட்ட மேலாண்மைக் குழு உறுப்பினா் சரவணன், வட்டார ஒருங்கிணைப்பாளா் யுவராஜ் முன்னிலை வகித்தனா். ஊராட்சி மன்ற துணைத் தலைவா் வசந்தா பலராமன் வரவேற்றாா்.
கூட்டத்தில் ஸ்ரீ பெரும்புதூா் ஒன்றியக் குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி கலந்து கொண்டு கலைஞா் கனவு இல்லத் திட்ட பயனாளிகளுக்கு தனி நபா் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கான பணி ஆணைகளை வழங்கினாா். பின்னா் தூய்மைப் பணியாளா்களுக்கு சால்வை அணிவித்து கெளரவித்தாா்.
தனி நபா் இல்லக் கழிப்பறையின் அவசியம், திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் ஆகியன குறித்த துண்டுப் பிரசுரங்களும் ற பொதுமக்களுக்கும், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கும் வழங்கப்பட்டன. திருமலங்கம் ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா்கள் சித்ரா, ரஜினி, ராஜேஸ்வரி, லோகேஷ் ஆகியோா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.