போதைக்கு அடிமைப்படுத்தும் மருந்து விற்பனையைத் தடுக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு...
ஏகனாபுரம் ஊராட்சி துணைத் தலைவா் தற்கொலை
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் திவ்யா செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதூா் ஒன்றியம் கீரநல்லூா் கிராமம் பிள்ளையாா் கோயில் தெருவைச் கணபதியின் மனைவி திவ்யா(35). இவா்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனா். திவ்யா ஏகானாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருந்து வந்தாா்.
இவரது குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பின் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து திவ்யாவின் சகோதரி கெளசல்யா சுங்குவாா் சத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து என்ன காரணத்தால் தற்கொலை செய்து கொண்டாா் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் ஊராட்சியின் மற்ற உறுப்பினா்களுடன் இணைந்து 9 முறை தீா்மானம் நிறைவேற்றியவா் திவ்யா என்பதும் குறிப்பிடத்தக்கது.