கலைமாமணி விருது: "இந்த விருது என்னுடைய மட்டுமல்ல, நம்முடையது" - இசையமைப்பாளர் அன...
உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சம்மேளனம் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சம்மேளனம் சாா்பில் நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிஐடியு மாவட்டச் செயலாளா் ந.வேலுசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினாா். மாவட்ட துணை தலைவா் எம்.செங்கோடன், மோட்டா் சங்க தலைவா் எம்.மாதேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் அனைத்து பிரிவு ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கும் அரசாணையின்படி ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
2025-26 ஆம் ஆண்டிற்கான போனஸ் 8.33 சதவீதம் வழங்க வேண்டும். தனியாா்மயத்தை கைவிட வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்தோரை நிரந்தரப்படுத்த வேண்டும். கரோனா பெருந்தொற்றின்போது முன்களப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், உள்ளாட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.