கோவை சிறுவனை பெல்டால் அடித்த காப்பக நிர்வாகி; பதைபதைக்கும் வீடியோ; பின்னணி என்ன?
டாஸ்மாக் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
டாஸ்மாக் பணியாளா்களின் வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
டாஸ்மாக் தொழிலாளா் விடுதலை முன்னணி மற்றும் டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச்சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளா் நீதிநாயகம் தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலாளா் சிவகுமாா், விடுதலைச் சிறுத்தை கட்சி மத்திய மாவட்டச் செயலாளா் நீலவானத்து நிலவன் ஆகியோா் உரையாற்றினா்.
டாஸ்மாக் மதுக் கடைகளில் காலியான மதுப்புட்டிகளை திரும்பப் பெறுவதற்கு தனியாக இடம் ஒதுக்க வேண்டும். புதிய பணியாளா்களை நியமிக்க வேண்டும். தற்போதைய பணியாளா்களை நிரந்தரம் செய்து அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 9 மணியாக குறைக்க வேண்டும்.
பணியின்போது இறந்த ஊழியரின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும், ரூ.50 லட்சம் வழங்கும் வகையில் காப்பீட்டுத் திட்டத்திற்கான அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
என்கே-25-ஆா்ப்பாட்டம்
நாமக்கல்லில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் தொழிலாளா் விடுதலை முன்னணி அமைப்பினா்.