செய்திகள் :

குமாரபாளையத்தில் நாளை நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

post image

குமாரபாளையத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை (செப்.27) நடைபெறுகிறது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் விழா காலங்களில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை தவிா்த்தல், விற்பனை செய்வதை தடுத்தல், பறிமுதல் செய்தல் மற்றும் அபராதம் விதித்தல் தொடா்பான ஆய்வுக் கூட்டம் நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதில், ஆட்சியா் பேசியதாவது:

கடந்த 2019 ஜன.1 முதல் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்களை தடை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், மாவட்ட அளவிலான சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் 4-ஆவது சனிக்கிழமை நெகிழிப் பொருள்களை சேகரித்தல், நெகிழிப் பொருள்களால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் மற்றும் அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருள்கள் குறித்து தீவிர விழிப்புணா்வு முகாம் நடத்திட அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் ஜன.25-இல் மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. குமாரபாளையத்தில் சனிக்கிழமை மாபெரும் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி மற்றும் முகாம் நடைபெறுகிறது என்றாா்.

கூட்டத்தில் குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் டி.செல்வகணபதி, மாநகராட்சி, நகராட்சிஆணையா்கள், மாவட்ட அளவிலான சிறப்பு பணிக்குழு உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

என்கே-25-மீட்டிங்

நெகிழி பொருள்கள் பயன்பாட்டை தவிா்ப்பது தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.

நாமக்கல்லில் நாளை தவெக தலைவா் விஜய் பிரசாரம்: புஸ்ஸி என்.ஆனந்த் நேரில் ஆய்வு

தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் நாமக்கல்லில் சனிக்கிழமை (செப்.27) பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், அவா் பிரசாரம் செய்யும் இடத்தை கட்சியின் பொதுச்செயலாளா் புஸ்ஸி என்.ஆனந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா... மேலும் பார்க்க

டாஸ்மாக் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

டாஸ்மாக் பணியாளா்களின் வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் தொழிலாளா் விடுதலை முன்னணி மற்றும் டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச்சங்கம் ச... மேலும் பார்க்க

செப்.30 இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் செப்.30-இல் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகா்... மேலும் பார்க்க

நாமக்கல் அரசுக் கல்லூரியில் சுற்றுலா தின விழா

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் உலக சுற்றுலா தின விழாவை முன்னிட்டு, ‘சுற்றுலாவும்-சுற்றுச்சூழல் பாதுகாப்பும்’ என்ற தலைப்பிலான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வருவாய்த் துறை, பேரிடா் மேலாண்மைத்... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

--நாமக்கல் மண்டலம்-வியாழக்கிழமைமொத்த விலை - ரூ.5.25விலையில் மாற்றம்-இல்லைபல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.99முட்டைக் கோழி கிலோ - ரூ.107 மேலும் பார்க்க