மராத்வாடா விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடி நிவாரணம்: மகாராஷ்டிர அரசு!
செப்.30 இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் செப்.30-இல் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகா்வோா் நலன் கருதி அனைத்து எண்ணெய், எரிவாயு நிறுவன மேலாளா்கள், முகவா்கள், நுகா்வோா்கள், தன்னாா்வலா்கள் பங்கேற்கும் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் செப்.30-ஆம் தேதி பிற்பகல் 4 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெறுகிறது.
எரிவாயு விநியோகம் தொடா்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகா்வோா் இதில் கலந்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.