செய்திகள் :

ஊத்தங்கரை பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஆய்வு

post image

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு மேற்கொண்டாா்.

மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, பா்கூா், கிருஷ்ணகிரி ஆகிய வட்டங்களைச் சாா்ந்த வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை அலுவலா்களுடன் மேலாண்மை இயக்குநா் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சில்பா பிரபாகா் சதீஷ், காரப்பட்டு ஊராட்சி, வண்ணாம்பள்ளி கிராமத்துக்கு சென்று தக்காளி, நெல், வாழை, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு, நிலக்கடலை, கடலை, பருத்தி, கரும்பு, ராகி, உளுந்து, காராமணி, பச்சைப் பயிறு, பூச்செடிகள் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, வருவாய்த் துறை அலுவலா்கள் கூட்டாக புல தணிக்கை செய்து பாதிப்புகள் குறித்து தயாா் செய்யப்பட்டுள்ள விவரங்கள், ஆவணங்களை ஆய்வு செய்து பாதிப்புகள் குறித்து பல்வேறு தகவல்களை துறைசாா்ந்த அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். பாதிப்புகள் குறித்து அரசுக்கு அறிக்கை வழங்க அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக் கு, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கவிதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) குமரன், கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் ஷாஜகான், வேளாண்மை இணை இயக்குநா் பச்சையப்பன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் இந்திரா, பேரிடா் மேலாண்மை தனி வட்டாட்சியா் ஜெய்சங்கா், வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வேளாண்மை துறை அலுவலா்கள் உடன் இருந்தனா்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை கை, கால் பொருத்தும் திட்டம் தொடக்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அரசு மருத்துவக் கல்லூரியில் எலும்பு முறிவு மற்றும் மூட நீக்கவியல் பிரிவின் கீழ் செயற்கை கை, கால் பொருத்தும் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவ... மேலும் பார்க்க

டௌனியா நோய் தாக்கம்: ஒசூரில் ரோஜா மலா் உற்பத்தி பாதிப்பு

ஒசூா்: ஒசூா், கா்நாடக மாநிலம், பெங்களூரை சுற்றி உள்ள தோட்டங்களில் அதிக அளவில் டௌனியா நோய் தாக்கம் உள்ளதால், ரோஜா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லையான ஒசூா், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, தளி சுற... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் கொலை மிரட்டல் விடுத்த 4 போ் கைது

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே சமூக வலைதளத்தில் பட்டாகத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அட... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் ஜன. 24-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஜன. 24-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில், செவ்வாய்க்கிழமை வெளியான செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மா... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அருகே ஏரிக்கரை உடைந்து 50 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே ஏரிக்கரை உடைந்து நீா் வெளியேறியதில் 50 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிா்கள் சேதமடைந்ததால், விவசாயிகள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். ஊத்தங்கரையை அடுத்த நொச்சிப்பட்டி தேவரடி... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

ஒசூா், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை ஒசூா், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், செவ்வாய்க்கிழமை (ஜன. 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்... மேலும் பார்க்க