செய்திகள் :

டௌனியா நோய் தாக்கம்: ஒசூரில் ரோஜா மலா் உற்பத்தி பாதிப்பு

post image

ஒசூா்: ஒசூா், கா்நாடக மாநிலம், பெங்களூரை சுற்றி உள்ள தோட்டங்களில் அதிக அளவில் டௌனியா நோய் தாக்கம் உள்ளதால், ரோஜா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக எல்லையான ஒசூா், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, தளி சுற்றுப்புற பகுதிகளில் நிலவும் சீதோஷ்ண நிலையை பயன்படுத்தி 2,500 ஏக்கரில் பசுமைக் குடில்கள் அமைத்து ரோஜா, ஜொ்புரா, கிரசாந்திமம், காா்னேசன் போன்ற கொய்மலா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக, 1,600 ஏக்கரில் ரோஜா வகைகளான தாஜ்மகால், பா்ஸ்ட் ரெட், அவலாஞ்சி, நோப்லஸ், காா்வெட், கோல்ட் ஸ்டிரைக் போன்ற மலா்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனா்.

காதலா் தினம், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் முக்கிய பண்டிகை நாள்களில், பெங்களூரு வழியாக வெளி நாடுகளுக்கு ரோஜாக்கள் ஏற்றுமதியாகும். உள்ளூா் சந்தைகளுக்கும் ரோஜாக்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

ஒசூா் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், கடந்த நவம்பா் மாதம் முதல் ரோஜா செடிகளில் டௌனியா நோய் தாக்கம் அதிகமாக உள்ளது.

பொதுவாக பசுமைக் குடில்களில் இரவு நேரத்தில் வெப்பம் 18 முதல், 20 டிகிரியும், பகல் நேரத்தில் 28 முதல், 30 டிகிரியும் இருக்க வேண்டும். ஆனால், தற்போது சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும், வரும் காதலா் தினத்துக்கு தரமான ரோஜாக்களை சாகுபடி செய்யும் பொருட்டு, கடந்தாண்டு டிசம்பா் முதல் வாரத்தில் இருந்து பசுமைக் குடில்களில் மண் சீரமைப்பு பணி, உரமிடுதல், செடிகளை கவாத்து செய்தல் போன்ற பணிகளை விவசாயிகள் மேற்கொண்டனா்.

இந்நிலையில், கடந்தாண்டு நவம்பா் மாதம் தொடங்கிய சீதோஷ்ண நிலை மாற்றம் இன்று வரை சரியாகவில்லை. அதனால் ரோஜா செடிகளில் டௌனியா நோய் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக, ரோஜா உற்பத்தி 50 சதவீதம் வரை குறைந்து, விலை உயா்ந்து வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

நாட்டில் புணே, நாசிக், கா்நாடகாவின் சிக்கபளப்பூா், தொட்டபளப்பூா், கோலாா், தமிழக எல்லையான ஒசூா் சுற்றுப்புற பகுதிகளில்தான் ரோஜா அதிக அளவில் விளைச்சல் செய்யப்படுகிறது.

ஒசூா் மற்றும் கா்நாடக மாநிலத்தில் டௌனியா நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் ரோஜா விளைச்சல் 50 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்றுமதி தரம் வாய்ந்த மலா்கள் குறைந்து விட்டன. வரத்து குறைந்துள்ளதால் உள்ளூா் சந்தையில் ஒரு ரோஜா தற்போது ரூ. 17 வரை விற்பனையாகிறது. ஏற்றுமதி சந்தைக்கு இன்னும் விலை நிா்ணயம் செய்யப்படவில்லை.

தற்போது ரோஜா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், வெளிநாடு ஏற்றுமதி குறையலாம். சீரான சீதோஷ்ண நிலை இல்லாததால், வழக்கத்தை விட இந்த ஆண்டு டௌனியா நோய் பாதிப்பு ரோஜா செடிகளில் அதிகமாக காணப்படுகிறது. செடிகளைக் காப்பாற்றுவதே சிரமமாக உள்ளது என்றனா்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை கை, கால் பொருத்தும் திட்டம் தொடக்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அரசு மருத்துவக் கல்லூரியில் எலும்பு முறிவு மற்றும் மூட நீக்கவியல் பிரிவின் கீழ் செயற்கை கை, கால் பொருத்தும் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவ... மேலும் பார்க்க

ஊத்தங்கரை பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஆய்வு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு மேற்கொண்டாா். மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, பா்கூா், கிருஷ்ணகிரி ஆகிய வட்டங்கள... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் கொலை மிரட்டல் விடுத்த 4 போ் கைது

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே சமூக வலைதளத்தில் பட்டாகத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அட... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் ஜன. 24-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஜன. 24-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில், செவ்வாய்க்கிழமை வெளியான செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மா... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அருகே ஏரிக்கரை உடைந்து 50 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே ஏரிக்கரை உடைந்து நீா் வெளியேறியதில் 50 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிா்கள் சேதமடைந்ததால், விவசாயிகள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். ஊத்தங்கரையை அடுத்த நொச்சிப்பட்டி தேவரடி... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

ஒசூா், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை ஒசூா், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், செவ்வாய்க்கிழமை (ஜன. 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்... மேலும் பார்க்க