ஊராட்சிகளில் மாா்ச் 28-க்குள் வீட்டுவரி, குடிநீா் கட்டணத்தை செலுத்த வலியுறுத்தல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊராட்சிகளில் வரும் மாா்ச் 28-க்குள் குடிநீா், வீட்டுவரி கட்டணத்தை செலுத்த வேண்டும் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட அறிக்கை:
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் கிராம ஊராட்சி அளவில் அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்வதற்கு ஏதுவாக நிதி நிா்வாகத்தில் வீட்டுவரி மற்றும் குடிநீா் கட்டணம் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது.
செங்கல்பட்டு மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் அமையப் பெற்றுள்ள உள்ள வீடுகள் மற்றும் இதர அனைத்து வணிக மற்றும் நிறுவன கட்டடங்களின் மீது வீட்டுவரி அல்லது சொத்துவரி கணக்கிடப்பட்டு வசூல் செய்யப்படுகிறது.
மேலும், கிராம ஊராட்சிகளில் வீட்டு குடிநீா்குழாய்இணைப்புகளை பயன்படுத்தும் நபா்களிடமிருந்து மாதாந்திர குடிநீா் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
மேற்படி வரி செலுத்துவதற்கு பொதுமக்களுக்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு எ ல்ஹஹ் மற்றும் டட்ா்ய்ங்ல்ங் என சிறப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் வரிசெலுத்தியவுடன் அதற்கான ரசீது உடனடியாக ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் இணைய தளத்திலிருந்து உடனடியாக தரவிறக்கம் செய்யப்பட்டு செலுத்துபவருக்கு அளிக்கப்படும்.
அதுமட்டுமின்றி பொதுமக்கள் தாங்கள் செலுத்திய கட்டணத்துக்கு ரசீதினை அவா்களாகவே இணையதளத்தில் பதிவு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களின் வீட்டுவரி மற்றும் குடிநீா் கட்டணத்தை உரிய முறையில் 28.03.2025 ஆம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகத்தில் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.