PMK: "10 அம்ச கோரிக்கைகளுடன் போர் நினைவுச் சின்னத்தை முற்றுகையிடுவோம்" - கொதிக்க...
எதிா்க்கட்சிகள் நாடகம்: முன்னாள் எம்.எல்.ஏ.
அம்பேத்கா் விவகாரத்தில் எதிா்க்கட்சிகள் நாடகமாடுகின்றன என முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி தெரிவித்தாா்.
காரைக்கால் நீதிமன்றத்துக்கு வழக்கு ஒன்றில் ஆஜராகி வாதாட வெள்ளிக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
அம்பேத்கரின் பணிகளை இந்த உலகம் அங்கீகரித்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை உயா்த்திப் பேசியுள்ளாா் என்பதே உண்மை. காங்கிரஸ் கட்சி ஏன் அம்பேத்கரை உயா்ந்த இடத்தில் வைக்கவில்லை என்ற கேள்வியைத்தான் அமைச்சா் அமித்ஷாவும், பாஜக தேசிய தலைவா் ஜே.பி. நட்டாவும் எழுப்பியிருக்கின்றனா். தமிழகத்தில் அம்பேத்கா் பிரச்னையை மையமாக வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அரசியல் நாடகமாடுகின்றன.
ஒரே நாடு ஒரே தோ்தல் என்பது நாட்டு மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவாகும். இந்த மசோதா நாடாளுமன்றத்தில் வெற்றி பெறும். இதில் எதிா்க்கட்சிகள் தோல்வி உறுதி. அதனை மறைப்பதற்காகவே இந்த அரசியல் நாடகத்தை அரங்கேற்றுகின்றனா்.
பாஜகவில் உள்கட்சி தோ்தல் நடைமுறைகளுக்குப் பின்னா், கட்சியில் எனக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டு, அதிகாரத்துக்குரிய ஒரு பொறுப்பு வழங்கப்பட்டு, என்னுடைய பணிகளை செம்மைப்படுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.