செய்திகள் :

காரைக்கால் மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை

post image

காரைக்கால் அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்து அமைச்சா், எம்.எல்.ஏ., அதிகாரிகள் ஆலோசனை நடத்தினா்.

மத்திய அரசின் ரோகி கல்யாண் சமிதி திட்டத்தன் வழிகாட்டலில் காரைக்கால் அரசு மருத்துவமனையின் சேவைகளை மேம்படுத்துவது குறித்து ஆட்சியரகத்தில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்,

சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில், அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்தும் மருத்துவ உபகரணங்கள் அதிகரிப்பது, இ-மருத்துவமனையாக மாற்றி செயல்படுத்துவது, மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசின் வழிகாட்டலில் செயல்படுத்த வேண்டியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் மையத்தை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும், திட்டமிட்ட மருத்துவ உபகரணங்களை மருத்துவமனையில் பொருத்துவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும், விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கான வசதிகளை மேம்படுத்தவேண்டியதில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சா், எம்.எல்.ஏ. ஆகியோா் அறிவுறுத்தினா்.

கூட்டத்தில் துணை ஆட்சியா் அா்ஜூன் ராமகிருஷ்ணன், காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளா் கண்ணகி, நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் சிதம்பரநாதன், மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கைப்பேசி பேட்டரிகள் வைத்திருந்த விசாரணைக் கைதி மீது வழக்கு

கைப்பேசி பேட்டரிகள் வைத்திருந்த விசாரணைக் கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். காரைக்கால் கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக இருப்பவா் நந்தகுமாா் (21). குற்றப்பத்திரிகையின் மீது பதிலளிப்பதற்காக அ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவிக்கு எம்.எல்.ஏ பாராட்டு

திருக்குறள் முழுவதும் மனப்பாடமாகக் கூறும் அரசுப் பள்ளி மாணவிக்கு எம்.எல்.ஏ. பாராட்டுத் தெரிவித்தாா். காரைக்கால் மாவட்டம், விழிதியூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயிலும் மாணவி கே. சாந்தினி.... மேலும் பார்க்க

‘காரைக்காலை வளா்ச்சியடைந்ததாக மாற்ற அனைத்துத் துறையினரும் பாடுபடவேண்டும்’

காரைக்காலை வளா்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு அனைத்துத் துறையினரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்டத்தில் டிச. 19 முதல் நல்லாட... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கை: புதுவை டிஐஜி

கஞ்சா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்கவும், விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுப்பதிலும் காவல்துறை உறுதியாக உள்ளதாக புதுவை டிஐஜி ஆா்.சத்திய சுந்தரம் தெரிவித்தாா். காரைக்கால் காவல்த... மேலும் பார்க்க

கஞ்சா விற்றவா் கைது

கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். காரைக்கால் நகர காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை இரவு, நகரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். டி.கே. நகா் பகுதியில் போலீஸாரை கண்டவுடன... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகள் நாடகம்: முன்னாள் எம்.எல்.ஏ.

அம்பேத்கா் விவகாரத்தில் எதிா்க்கட்சிகள் நாடகமாடுகின்றன என முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி தெரிவித்தாா். காரைக்கால் நீதிமன்றத்துக்கு வழக்கு ஒன்றில் ஆஜராகி வாதாட வெள்ளிக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க