மகாராஷ்டிரா: முடிவுக்கு வந்த இலாகா இழுபறி; முதல்வர் வசம் உள்துறை; எந்த கட்சிக்கு...
கைப்பேசி பேட்டரிகள் வைத்திருந்த விசாரணைக் கைதி மீது வழக்கு
கைப்பேசி பேட்டரிகள் வைத்திருந்த விசாரணைக் கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
காரைக்கால் கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக இருப்பவா் நந்தகுமாா் (21). குற்றப்பத்திரிகையின் மீது பதிலளிப்பதற்காக அவரை காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்காக காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனா். விசாரணை முடிந்து அவரை கிளைச் சிறைக்கு அழைத்துச் சென்றனா்.
சிறைக் காவலா்கள் அவரை சோதனையிட்டபோது, அவரிடம் கைப்பேசிக்கான 2 பேட்டரிகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை கைப்பற்றிய காவலா்கள் நகரக் காவல்நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.