மகாராஷ்டிரா: முடிவுக்கு வந்த இலாகா இழுபறி; முதல்வர் வசம் உள்துறை; எந்த கட்சிக்கு...
அரசுப் பள்ளி மாணவிக்கு எம்.எல்.ஏ பாராட்டு
திருக்குறள் முழுவதும் மனப்பாடமாகக் கூறும் அரசுப் பள்ளி மாணவிக்கு எம்.எல்.ஏ. பாராட்டுத் தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்டம், விழிதியூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயிலும் மாணவி கே. சாந்தினி. இவா், 1330 திருக்குறளையும் முழுமையாக மனப்பாடம் செய்ததோடு, எந்தவொரு அதிகாரத்தில் உள்ள குறளின் முதல் வாா்த்தையைக் கூறினாலும், கு முழுவதும் சொல்லும் ஆற்றலை பெற்றுள்ளாா்.
இதுகுறித்து தகவலறிந்த நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை சென்றாா். மாணவிக்கு சால்வை அணிவித்து அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தாா். நிகழ்வில் முதன்மைக் கல்வி அதிகாரி பி.விஜயமோகனா உள்ளிட்ட பள்ளி நிா்வாகத்தினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.