செய்திகள் :

எனக்கும் தனுஷுக்கும் பிரச்னையா? வெற்றி மாறன் விளக்கம்!

post image

சிம்புவுடான படம் குறித்து இயக்குநர் வெற்றி மாறன் விளக்கமளித்துள்ளார்.

நடிகர் சிலம்பரசன் - இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் புதிய படம் உருவாகி வருகிறது. இப்படம் தனுஷ் நடித்த வடசென்னை படத்தின் கதையைத் தொட்டு எடுக்கப்படவுள்ளது.

இதற்கிடையே, தனுஷை வைத்து வடசென்னை - 2 படத்தை எடுக்காமல் ஏன் வெற்றி மாறன் சிம்புவைத் தேடிச் சென்றார் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்தது. இதனால், தனுஷுக்கும் ஏமாற்றம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், இயக்குநர் வெற்றி மாறன் புதிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வாடிவாசல் திரைப்படத்தின் பணிகள் திரைக்கதை, தொழில்நுட்ப காரணங்களால் கொஞ்சம் காலதாமதமாகிறது. தற்போது, தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் நடிகர் சிம்புவை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறேன். இப்படத்தைக் குறித்து பல்வேறு வதந்திகள் வருவதால், நானே விளக்கமளிக்கிறேன்.

இப்படம் வடசென்னை - 2 கிடையாது. தனுஷ்தான் வடசென்னை - 2 படத்தின் நாயகன். அப்படம் முழுக்க முழுக்க அன்புவின் எழுச்சியாகத்தான் இருக்கும். ஆனால், சிம்புவுடனான படம் வடசென்னை கதையின் உலகத்திற்குள்தான் நடக்கிறது. அப்படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் இதில் இருப்பார்கள்.

இதுகுறித்து நான் தனுஷிடம் பேசியபோது, தாராளமாக வடசென்னை கதையை சிம்புவை வைத்து எடுங்கள் என அப்படத்தின் தயாரிப்பாளராக எனக்கு ஒப்புதல் அளித்தார். அதற்காக எந்தப் பணமும் வேண்டாம் என்றும் மறுத்தார். எனக்கும் தனுஷுக்கும் இடையேயான உறவு நீண்ட காலமாக நல்ல புரிதலுடன் இருக்கிறது.

இதையும் படிக்க: சிம்பு - வெற்றி மாறன் படத்தின் அறிவிப்பு விடியோ எப்போது?

வடசென்னை படத்தின் தயாரிப்பாளராக தனுஷுக்கு பல உரிமைகள் இருந்தும் என்னைப்போன்ற படைப்பாளி அவர் விரும்பும் படத்தை எடுப்பதற்கான சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார். எங்கள் உறவு தேவையற்ற வதந்திகளால் தவறாக புரிந்துகொள்ளப்படக்கூடாது என்பதற்காவே இதைச் சொல்கிறேன். தனுஷ் பல வகைகளில் எனக்கு உதவி செய்துகொண்டிருப்பவர். எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விளக்கம் ரசிகர்களிடம் வடசென்னை படம் குறித்து புரிதலைக் கொடுத்திருக்கிறது.

director vetri maaran spokes about actor dhanush and silambarasan movie.

சிவகார்த்திகேயனிடன் மன்னிப்புக் கேட்ட அமீர் கான்! ஏன்?

நடிகர் அமீர் கான் சித்தாரே சமீன் பர் படத்திற்காக சிவகார்த்திகேயனிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். நடிகர் அமீர் கான் நடிப்பில் வெளியான சித்தாரே சமீன் பர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று... மேலும் பார்க்க

3 பிஎச்கே டப்பிங்கிலேயே அழுதுவிட்டேன்: சரத் குமார்

3 பிஎச்கே திரைப்படத்திற்கான டப்பிங்கின்போதே அழுதுவிட்டதாக நடிகர் சரத் குமார் தெரிவித்துள்ளார். நடிகர் சித்தார்த் நாயகனாக நடிக்க சரத் குமார், தேவயானி, மீத்தா ரகுநாத் உள்ளிட்டோர் நடித்த 3 பிஎச்கே திரைப்... மேலும் பார்க்க

முதலிடத்தில் சிறகடிக்க ஆசை! தமிழ் நாட்டின் டாப் 5 தொடர்கள் என்னென்ன?

சின்ன திரையில் அதிக டிஆர்பி புள்ளிகளைப் பெற்று சிறகடிக்க ஆசை தொடர் முதல் இடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ள தொடர்கள் குறித்து காணலாம். சிறகடிக்க ஆசைசின்ன திரையில் பல்வ... மேலும் பார்க்க

எதிர்நீச்சல் -2 தொடரிலும் நடிக்கும் இயக்குநர் திருச்செல்வம்!

சின்ன திரை இயக்குநர் திருச்செல்வம் எதிர்நீச்சல் -2 தொடரிலும் நடிக்கிறார். இதற்கு முன்பு இவர் இயக்கிய எதிர்நீச்சல் முதல் பாகத்திலும், கோலங்கள் தொடரிலும் முக்கிய பாத்திரத்தில் திருச்செல்வம் நடித்திருந்த... மேலும் பார்க்க

டூரிஸ்ட் ஃபேமிலி மொத்த வசூல் இவ்வளவா?

நடிகர் சசிகுமார் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் மே.1 ஆம் தேதி வெளியான ... மேலும் பார்க்க

ஜி.வி. பிரகாஷின் பிளாக்மெயில் வெளியீட்டுத் தேதி!

ஜி.வி. பிரகாஷ் நடித்த பிளாக்மெயில் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கடைசியாக தயாரித்து நடித்த கிங்ஸ்டன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ... மேலும் பார்க்க