ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
என்எல்சி கற்றல், மேம்பாட்டு மையத்துக்கு தேசிய அங்கீகாரம்
கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்துக்கு மத்திய அரசின் திறன் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், உள்ள சிவில் சேவைகள் பயிற்சி நிறுவனங்களுக்கான தேசிய தர நிலைகள் கழகம் தேசிய அளவிலான அங்கீகார சான்றிதழை வழங்கியது.
எச்.எஸ்.அசோகானந்த் (ஐஏஎஸ் ஓய்வு) மற்றும் அக்ஷய் குமாா் ஆகிய மதிப்பீட்டாளா்களைக் கொண்ட திறன் மேம்பாட்டு ஆணைய (சிபிசி) மதிப்பீட்டுக்குழு, கடந்த மாா்ச் 12,13 ஆகிய தேதிகளில் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் உள்ள கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தின் மதிப்பீட்டை நடத்தியது.
என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி வாழ்த்துக்களைத் தெரிவித்து, மனித வளத்துறை இயக்குநா் சமீா் ஸ்வரூப் உடன் இணைந்து, கற்றல் மற்றும் மேம்பாட்டு மையக் குழுவினரிடம் அங்கீகாரச் சான்றிதழை வழங்கி பாராட்டினாா்.