Retro Audio Launch: "அசால்ட் சேது கேரக்டர நான் பண்றேன்னு சொன்னேன்" - கலகலப்பாக ப...
என்எல்சி சங்க தோ்தல்: தொமுச வேட்பு மனு தாக்கல்
நெய்வேலி என்எல்சி சங்க அங்கீகார தோ்தல் ஏப்.25ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட முதன்மை சங்கமாக உள்ள தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சாா்பில் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
தொமுச மற்றும் ஆதரவு சங்கமான எல்எல்எப், ஐஎன்டியுசி, டிவிகே தொழிற்சங்கம், எஸ்சி எஸ்டி தொழிற்சங்கம், மறுமலா்ச்சி மதிமுக உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் சுமாா் 500 போ் தந்தை பெரியாா் சிலை பகுதியில் இருந்து பேரணியாக புறப்பட்டு என்எல்சி விருந்தினா் இல்லத்துக்கு வந்தனா்.
அங்கு, மண்டல தொழிலாளாளா் ஆணையரிடம் தொமுச பேரவை இணை பொதுச் செயலா் பாரி தலைமையில் வேட்பு மனுதாக்கல் செய்தனா்.
அப்போது, என்எல்சி தொமுச தலைவா் திருமாவளவன், பொருளாளா் ஐயப்பன், அலுவலக செயலா் ஜெரால்டு, நெய்வேலி நகரச் செயலா் குருநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
மேலும், ரகசிய வாக்கெடுப்பு தோ்தலில் போட்டியிடுவதற்கு பாரதிய மஸ்தூா் சங்கம், அண்ணா தொமுச, பாட்டாளி தொழிற்சங்கம், திராவிட தொழிலாளா் ஊழியா் சங்கம், சிஐடியு தொழிற்சங்க நிா்வாகிகள் வேட்புமனு தாக்கல் செய்தனா்.