செய்திகள் :

'எலான் அமெரிக்காவில் வேண்டும்..!' - ட்ரம்ப்பின் திடீர் மாற்றம்; நிம்மதி பெருமூச்சுவிடும் எலான் மஸ்க்

post image

சில மாதங்களாக, நட்பிற்கு இலக்கணமாக இருந்து வந்தார்கள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க்.

'ஒன் பிக் அண்டு பியூட்டிஃபுல் பில்'லை ட்ரம்ப் அறிமுகம் செய்ய, அந்த நட்பில் விரிசல் விழுந்தது. அந்தப் பில்லில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சலுகையை 'கட்' செய்தது மஸ்கிற்கு பிடிக்கவில்லை என்று ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

எலான் மஸ்கும் தன் பங்கிற்கு, பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீன் ஆவணத்தில் ட்ரம்ப் பெயர் உள்ளது என்ற குண்டைத் தூக்கி போட்டார்.

இடையில் எலான் மஸ்க் மன்னிப்பு கேட்கும் தொனியில் சென்றாலும், எதுவும் வேலைக்கு ஆகவில்லை.

எலான் மஸ்க் - ட்ரம்ப்
எலான் மஸ்க் - ட்ரம்ப்

ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

இந்த நிலையில், நேற்று ட்ரம்ப் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

அதில், "எலான் மஸ்க் அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து பெறும் பெரிய அளவிலான மானியங்களை நிறுத்தி, எலான் மஸ்க் நிறுவனங்களை நான் அழித்துவிடுவேன் என்று அனைவரும் கூறுகிறார்கள்.

ஆனால், அது உண்மை அல்ல.

எனக்கு எலான் மற்றும் அவரது அனைத்து பிசினஸ்களும் அமெரிக்காவிற்குள்ளேயே இருக்க வேண்டும்.

முன்பை விட, அது இப்போது இன்னும் நன்கு செயல்புரிய வேண்டும்.

அது நன்கு செயல்படும்போது, அமெரிக்காவும் நன்கு வளரும். இது நம் அனைவருக்குமே நன்மை.

நாம் தினம் தினம் சாதனைகளைப் படைத்து வருகிறேன். அது அப்படியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்ரம்ப் - எலான் மஸ்க்
ட்ரம்ப் - எலான் மஸ்க்

எலான் மஸ்கின் பதில்

இந்தப் பதிவிற்கு எலான் மஸ்க் 'Phew' என்று நிம்மதியான தொனியில் ஒற்றை வார்த்தையில் பதிவிட்டுள்ளார்.

ட்ரம்ப் வரியைக் காட்டி எலான் மஸ்கை பயமுறுத்தி வந்த நிலையில், திடீரென்று ட்ரம்ப் இப்படி அந்தர்பல்டி அடித்துள்ளார்.

இந்தப் பதிவுகளின் மூலம், ட்ரம்ப் - எலான் மஸ்க் நட்பு மீண்டும் மலருகிறதா என்கிற கேள்வி எழுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

ECI முறைகேடு: `எங்களிடம் ஆதாரமிருக்கிறது' - Rahul Gandhi | Kamal DMK BJP | Imperfect Show 25.7.2025

* இந்திராவை முந்திய மோடி? * பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு எவ்வளவு செலவானது? - வெளியுறவு அமைச்சகம் பதில்! * இந்தியா - பிரிட்டன் ஒப்பந்தம் கையெழுத்து?* “இந்தியர்களை பணியமர்த்துவதை நிறுத்த வ... மேலும் பார்க்க

'ராமதாஸ் கொடுத்த புகார்; அன்புமணியின் நடைபயணத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு!' - முழு விவரம்!

'அன்புமணி நடைபயணம்..'பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸின் 'உரிமை மீட்க தலைமுறை காக்க...' என்கிற 100 நாள் நடைபயண பிரசாரத்துக்கு தமிழக டிஜிபி அனுமதி வழங்க மறுத்திருக்கிறார். அன்புமணிபாமக நிறுவனர் ராமதாஸ... மேலும் பார்க்க

ஜூலை 26, 27-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடி; நிகழ்ச்சி நிரல் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள்கள் சுற்றுப்பயணமாக தற்போது இங்கிலாந்து, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்.பிரதமர் மோடி இங்கிலாந்து பயணம்நேற்று இங்கிலாந்தில் அந்நாட்டு பிரதமருடனான சந்திப்ப... மேலும் பார்க்க

`முதல்வரை ஏமாற்றுகிறார்கள்; உயரதிகாரிகள் லாபி செய்து..!’ - கொந்தளிக்கும் ஹென்றி திபேன் | Interview

சிவகங்கை அஜித் குமார் சித்ரவதை கொலை வழக்கு, டி.எஸ்.பி சுந்தரேசன் வெளிப்படையாக உயர் அதிகாரிகளுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகள் என நாளுக்கு நாள் காவல்துறை மீதான விமர்சனங்கள் அதிகரித்துக் கொண்டே வர... மேலும் பார்க்க

``நேர்மையான காவல்துறை அதிகாரிக்கு இந்த நிலைமை என்றால், மக்களை யார் பாதுகாப்பது? - எடப்பாடி கேள்வி

திருச்சி மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பரத் ஸ்ரீனிவாஸ். இவர், கடந்த 1997 - ம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து தற்பொழுது துணை கண்காணிப்பாளராக ... மேலும் பார்க்க