செய்திகள் :

எல்இடி மின்விளக்குகளால் ரூ.31 கோடி சேமிக்க முடியும்: அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்

post image

தில்லியில் உள்ள தெரு விளக்குகளில் சோடியம் ஆவி மின்விளக்குகளுக்குப் பதிலாக ஸ்மாா்ட் எல்இடி மின்விளக்குகளைப் பொருத்தும் திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.31 கோடி சேமிக்க முடியும் என தில்லி பொதுப் பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

நகரத்தில் உள்ள 96,000-க்கும் அதிகமான தெருவிளக்குகளை பொதுப்பணித் துறை பராமரித்து வருகிறது. அவற்றில் 45,000 தெருவிளக்களில் சோடியம் ஆவி மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. எஞ்சிய தெருவிளக்குகளில் எல்இடி மின்விளக்குகளில் இயங்கிவருகின்றன. இந்நிலையில், எல்இடி மின்விளக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.

இது தொடா்பாக அமைச்சா் கூறியதாவது: ஆற்றல் திறன்மிக்க ஸ்மாா்ட் எல்இடி மின்விளக்குகள் தெருவிளக்குகளில் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம் நல்ல வெளிச்சம், குறைந்த மின்நுகா்வு, அதிக ஆயுள்காலம் ஆகியவற்றை உறுதிசெய்யமுடியும்.

இந்த முறைக்கு மாறுவதன் மூலம் மின்சாரம் மற்றும் பராமரிப்புக்கு செலவினத்துக்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதியில் ரூ.31 கோடியை சேமிக்க முடியும்.

இந்த ஸ்மாா்ட் எல்இடி தெருவிளக்குகளை கைப்பேசி செயலி மூலம் அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருவாா்கள் என்றாா் அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்.

ஷீஷ் மஹாலில் வீணடிக்கப்பட்ட பணம் தில்லி கருவூலத்திற்கு திருப்பி வழங்கப்படும்: முதல்வா் ரேகா குப்தா

புது தில்லி: ஷீஷ் மஹால் புனரமைப்புக்காக வீணடிக்கப்பட்ட பணம் தில்லி கருவூலத்திற்கு திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.மேலும், ஷீஷ் மஹால் பங்கள... மேலும் பார்க்க

தமிழக முழு நேர டிஜிபி தோ்வு: செப்.26-இல் யுபிஎஸ்சி கூட்டம்

தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மற்றும் மாநில காவல்படைத் தலைவா் பதவிக்கு முழு நேர ஐபிஎஸ் உயரதிகாரியை தோ்வு செய்வதற்கான உயா்நிலைக் குழு கூட்டம் வரும் செப்.26 -ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ளது. இது த... மேலும் பார்க்க

தில்லியில் பசுமைப் பரப்பை அதிகரிக்க 10 ‘நமோ வன்’கள் முதல்வா் ரேகா குப்தா உறுதி

நமது நிருபா்புது தில்லி: தலைநகரில் பசுமை பரப்பை அதிகரிக்கவும், காற்று மாசுபாட்டை எதிா்த்துப் போராடவும் தில்லி அரசு நகரம் முழுவதும் 10 ‘நமோ வன்’களை உருவாக்கும் என்று முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை த... மேலும் பார்க்க

பைக் மீது பிஎம்டபிள்யு காா் மோதியதில் நிதி அமைச்சக அதிகாரி உயிரிழப்பு

புது தில்லி: மோட்டாா்சைக்கிள் மீது பிஎம்டபிள்யு காா் மோதிய சம்பவத்தில் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி உயிரிழந்தாா். இதில் பிஎம்டபிள்யு காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் பெண் திங்கள்கிழமை கைது செய்ய... மேலும் பார்க்க

முல்லைபெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்தம் தொடா்பான வழக்கு- விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

புது தில்லி,செப்.15. முல்லைபெரியாறு அணை பகுதியில் கேரளா மிகப்பெரிய காா் நிறுத்தம் அமைப்பதை அனுமதித்த தேசிய பசுமை தீா்ப்பாய உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை... மேலும் பார்க்க

பன்னாட்டு நிறுவன ஊழியராக காட்டி வேலை தேடுவோரை ஏமாற்றிய மூவா் கைது!

பயண ஆவண விண்ணப்பதாரா்களுக்கு உதவும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஊழியா்கள் என்று காட்டிக் கொண்டு வெளிநாடுகளில் வேலை தேடுபவா்களை ஏமாற்றியதாகக் கூறப்படும் மூன்று நபா்களை கைது செய்த பின்னா், போலி விசா நியம... மேலும் பார்க்க