அமித் ஷா மேஜையில் மாஜிக்கள் Files! சரணடைந்த எடப்பாடி?! | Elangovan Explains
எளிமையாக வாழ்வது பழமைவாதமா? - தேவையில்லாத விஷயங்களால் வரும் சிக்கல் என்ன? | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
இன்றைய காலகட்டத்தில் 'கீப் இட் சிம்பிள்' என்ற வாசகம் பலருக்கும் எதிர்மறை வாசகமாகக்கூடத் தோன்றலாம். எளிமையைப் பற்றிப் பேசுபவர்கள் பழமைவாதிகள் என்றும் சிலர் எண்ணுவதுண்டு. ஆனால் எளிமை என்பது குழப்பத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது. நாம் தெளிவாகச் சிந்திப்பதற்கும் நம் மனம் அமைதியாக இருப்பதற்கும் வழிவகுக்கிறது.
நம் வேலை, உறவுகள், தனிப்பட்ட வளர்ச்சி என எதுவாக இருந்தாலும் சரி, உண்மையில் எது முக்கியமோ அதில் நாம் கவனம் செலுத்த எளிமை நம்மை அனுமதிக்கிறது.

எளிமையின் அழகு:
எளிமை என்பது நம் சோம்பேறித்தனத்தால் எந்த செயலையும் குறைவாகச் செய்வதல்ல, மாறாக எது தேவையோ அதைச் செய்வது.
நீங்கள் ஒரு செயலை எளிமைப்படுத்தும் போது அங்கே தேவையில்லாதவற்றை அகற்றித் தெளிவிற்கான இடத்தை உருவாக்குகிறீர்கள்.
உதாரணமாக, உங்கள் வீட்டில் சுத்தமான ஒழுங்காக அமைக்கப்பட்ட மேசை மற்றும் இன்னொரு இடத்தில் எல்லாம் சிதறிக் கிடக்கின்ற மேசையைப் பற்றியும் சிந்தித்துப் பாருங்கள்.
முதலாவது மேசை படைப்பாற்றல் மற்றும் கவனத்தை ஈர்க்கிறது, இரண்டாவது மேசை மன அழுத்தத்தையும் கவனச்சிதறலையும் உருவாக்குகிறது.
சிக்கல்:
அதிகமான options நம் முன்பு இருந்தால் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பமே நம்மிடம் அதிகம் காணப்படும். தேவையில்லாத பலவற்றை நாம் ஆராய்ச்சி செய்து செய்து கொண்டிருப்போம். இந்த குழப்பம் நாம் முடிவெடுக்கும் நேரத்தை அதிகரித்துவிடுகிறது.

எப்படி எளிமையைக் கடைப்பிடிப்பது?
முன்னுரிமை: உங்கள் வாழ்க்கையில் முக்கியமான பணிகள் என்ன? உங்கள் தேவைகள் என்ன என்பதை அறிந்து அதன் மீது கவனம் செலுத்துங்கள். முக்கியமில்லாத தேவையற்ற எண்ணங்கள் மீதும், செயல்கள் மீதும் கவனத்தைக் குறைத்து விடுங்கள்.
உதாரணத்திற்கு நாளை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று முந்தைய நாள் இரவே ஒரு டு டூ லிஸ்ட் தயாரிக்கிறீர்கள் என்று எண்ணிக்கொள்ளுங்கள். அதில் 10 அல்லது 20 பணிகளைப் பட்டியலிட்டு, அதில் எதை முதலில் செய்வது எதைக் கடைசியாகச் செய்வது என்று குழம்புவதற்குப் பதிலாக 3 அல்லது 4 மிக முக்கியமான பணிகளைப் பட்டியலிட்டு அதில் கவனம் செலுத்துவது நிச்சயம் உங்கள் செயல்திறனை அதிகரிக்கும்.
தெளிவாகத் தொடர்பு கொள்ளுங்கள்: நீங்கள் உரையாடும் பொழுது, எழுதும் பொழுது, மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அனுப்பும் பொழுது, சுருக்கமாகவும், தெளிவாகவும் உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள்.
மினிமலிசம்: உங்களைச் சுற்றி இருக்கின்ற உங்களுக்குத் தேவையில்லாத அனைத்தையும் அகற்றுங்கள். அளவை விடத் தரத்தில் கவனம் செலுத்துங்கள்.
உங்கள் பீரோவிற்குள் இருக்கும் அனைத்து ஆடைகளையும் நீங்கள் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் நீங்கள் வாங்கி குவித்து இருக்கும் பொருட்கள் அனைத்தும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்கிறதா? இல்லை இடத்தை அடைத்துக் கொண்டு இருக்கிறதா?
உங்கள் பழக்கங்களைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். உங்களை வாழ்வில் முன்னேற்றாத பயனற்ற பழக்கங்களை இன்றே தூக்கி எறியுங்கள். பெரும்பாலான மனிதர்கள் தேவையற்ற விஷயங்களில்தான் அதிக செலவு செய்கின்றனர்.

எளிமையின் நன்மைகள்:
மனத் தெளிவு: நீங்கள் உங்களை எளிமையாக வைத்துக் கொள்வது உங்கள் கவனச்சிதறலைக் குறைத்துத் தெளிவாகச் சிந்திக்க வைத்து, உங்கள் படைப்பாற்றலை அதிகரிக்கிறது.
நேர மேலாண்மை: தேவையில்லாதவற்றை நீங்கள் நீக்குவதன் மூலம், உண்மையில் உங்களுக்கு என்ன தேவை என்பதைக் கண்டறிந்து அதில் அதிக நேரத்தை உங்களால் முதலீடு செய்ய முடியும்.
நாம் யார் என்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆடம்பரத்தைத் தேடி ஓடும் மனிதர்கள் மத்தியில், எளிமையாகவும், மகிழ்ச்சியாகவும் உங்கள் வாழ்க்கையை வாழுங்கள்.
நன்றி,
நரேந்திரன் பாலகிருஷ்ணன்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks