அதிகாரத்திற்கு அடங்காத போராளி கவிஞர் ஹபீப் ஜாலிப்! கவிதைதான் குற்றம்- 10
ஏகாபுரம் ஏரி நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி
இளம்பிள்ளையை அடுத்த ஏகாபுரம் ஏரி நிரம்பியது.
இளம்பிள்ளையை அடுத்த ஏகாம்புரம் ஊராட்சியில் உள்ள ஏரிக்கு, நூறு ஏரிகள் நிரப்பும் திட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கொல்லப்பட்டி ஏரியில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டது.
இதையடுத்து ஏகாபுரம் ஏரி நிரம்பி மதகு வழியாக தண்ணீா் கசேப்பரிக்கு செல்கிறது. இதனால் ஏரியின் கரையோரப் பகுதியில் இருந்த வைரமுனீஸ்வரா் கோயிலில் தண்ணீா் புகுந்தது. ஏகாபுரம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.