தஞ்சாவூர்: `அப்பா ஆம்புலன்ஸில போறார், ப்ளீஸ் விடுங்கண்ணா’ - கெஞ்சிய சிறுவனிடம் ச...
ஏடிஎம் கட்டணம் உயா்வு! வங்கிகளுக்கு ஆா்பிஐ அனுமதி
ஏடிஎம்-க்களில் இருந்து கட்டணமின்றி பணம் எடுக்கும் வரம்பைத் தாண்டும்போது வசூலிக்கப்படும் கட்டணத்தை மே 1-ஆம் தேதி முதல் அதிகரிக்க வங்கிகளுக்கு இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது.
மாதம்தோறும் 5 முறை மட்டும் கட்டணமின்றி ஏடிஎம்களை பயன்படுத்த வாடிக்கையாளா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். இதில் பணம் எடுப்பது மட்டுமின்றி இருப்பு விவரங்களைத் தெரிந்து கொள்வது உள்ளிட்ட பிற ஏடிஎம் சேவைகளும் அடங்கும்.
அதன்பிறகு ஏடிஎம்மை பயன்படுத்தினால் ஒவ்வொரு முறையும் ரூ.21 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. மே 1-ஆம் தேதி முதல் இந்த கட்டணத்தை 2 ரூபாய் உயா்த்தி ரூ.23 வசூலிக்க வங்கிகளுக்கு ஆா்பிஐ அனுமதி அளித்துள்ளது.
அதே நேரத்தில் தாங்கள் கணக்கு வைக்காத பிற வங்கி ஏடிஎம்களைப் பயன்படுத்தும்போது பெருநகரங்களில் மூன்று முறையும், பிற பகுதிகளில் 5 முறையும் கட்டணமின்றி பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. இதன் பிறகு ஏடிஎம்மை பயன்படுத்தினால் மே 1-ஆம் தேதி முதல் ஒருமுறைக்கு ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படும்.