மகாராஷ்டிரத்தில் கார் ஆற்றில் கவிழ்ந்தது: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!
ஏலச்சீட்டு நடத்தி ரூ. 25 லட்சம் மோசடி செய்தவா் கைது
திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 25 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபரை காவல் துறையினா் கைது செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா் ராம்குமாா் (42). இவா், திருப்பூா் பல்லடம் சாலை வீரபாண்டி பிரிவில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தாா். இதில் பல்வேறு வகையான ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளாா். திருப்பூா் மாநகரில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் சீட்டில் சோ்ந்து பணம் செலுத்தி வந்தனா்.
இந்நிலையில், 50-க்கும் மேற்பட்ட நபா்களிடம் ரூ. 25 லட்சத்துக்கும் மேல் வசூல் செய்து பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி ராம்குமாா் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடா்பாக திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.லட்சுமியிடம் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளித்தனா். இதன் பேரில் திருப்பூா் மாநகர மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தனிப்படையினா் விசாரித்து வந்த நிலையில் ராம்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.