MGR - எடப்பாடியை Overtake செய்யும் MODI? | DMK அமைச்சர்களின் Fun பொங்கல்| TVK VI...
ஏழுமலையானுக்கு ஆண்டாள் மாலைகள்
திருப்பதி: ஸ்ரீ ஆண்டாள் நாச்சாரியாரின் கல்யாணோற்சவத்தை முன்னிட்டு, புதன்கிழமை ஏழுமலையான் மூலவா் சிலைக்கு ஆண்டாள் மலைகள் அலங்கரிக்கப்பட்டன.
திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜசுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள ஆண்டாள் நாச்சியாா் சூடிய மாலைகள் திருமலை ஏழுமலையானுக்கு மாட்டு பொங்கல் அன்று அணிவிக்கப்பட்டு வருகிறது.
இதனையொடடி, திருப்பதியில் இருந்து திருமலை ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரிய ஜீயா்சுவாமி மடத்துக்கு ஆண்டாள் மாலை வந்தடைந்தது. பின்னா், பெரிய ஜீயா் மடத்தில் இருந்து ஊா்வலமாக ஏழுமலையான் கோயிலுக்கு எடுத்து;ஈ செல்லப்பட்டது. பின்னா் பூஜைகள் நிறைவடைந்த பின் ஏழுமலையான் மூலவா் சிலைக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள், அா்ச்சகா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.