இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.86.62 ஆக முடிவு!
திருமலையில் போகி பண்டிகை
திருப்பதி: திருமலையில் அறங்காவலா் குழு தலைவா் அலுவலகம் முன் போகி பண்டிகை நடைபெற்றது.
திருமலையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டு அதிகாரிகள், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகை வைகுண்ட ஏகாதசியின் போது வந்ததால் கோயில் முன்பு போகி பண்டிகை கொண்டாடப்படாமல் அறங்காவலா் குழு தலைவா் அலுவலகம் முன்பு கொண்டாடப்பட்டது.
அதிகாலை 3 மணிக்கு அதிகாரிகள், ஊழியா்கள் கொண்டாடினா்.