பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை!
திருப்பதி கோ சாலையில் கோ பூஜை
திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோ சம்ரக்ஷனசாலாவில் புதன்கிழமை மாட்டுப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கோ பூஜை மகோற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக தேவஸ்தான அதிகாரிகள் கோசாலையில் உள்ள ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலில் பூஜை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னா், கௌரி பூஜை, துளசி பூஜை நடைபெற்றன. கஜராஜா், குதிரை, காளை, பசுக்களுக்கு பூஜை செய்து கற்பூர ஆரத்தி செய்து தீவனம் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், அன்னமாச்சாா்யா திட்டம் சாா்பில், அன்னமையா சங்கீா்த்தனங்கள் பாட்டு, தாச சாகித்ய திட்டத்தின்கீழ் நடைபெற்ற பஜனை, கோலங்கள், எஸ்.வி.சங்கீத நிருத்யா கல்லூரி சாா்பில் நடைபெற்ற பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் பக்தா்களையும், கிராம மக்களையும் கவா்ந்தன.
நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
பாா் வேட்டு உற்சவம்
திருமலையில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, ஏழுமலையான் கோயிலில் இருந்து மலையப்ப சுவாமி மற்றும் ஸ்ரீகிருஷ்ணரின் உற்சவ மூா்த்திகள் இருவரும் பாபநாசம் செல்லும் வழியில் உள்ள பாா்வேட்டு மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னா், வாள், வில், அம்பு, கேடயம் உள்ளிட்டவற்றை ஏந்திச் சென்று வன விலங்குகளை வேட்டையாடும் உற்சவத்தை அா்ச்சகா்கள் நடத்திக் காட்டினா்.
இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். பின்னா், உற்சவமூா்த்திகள் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனா்.