ஏழுமலையான் அறக்கட்டளைக்கு ரூ.11 கோடி நன்கொடை
திருப்பதி: ஏழுமலையான் பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ள அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.11 கோடி நன்கொடை அளிக்கப்பட்டது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையான் பெயரில் ஏற்படுத்தி உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னதான அறக்கட்டளைக்கு திங்கட்கிழமை ரூ.11 கோடி நன்கொடையாக அளிக்கப்பட்டது.
மும்பையில் உள்ள பிரசித் யூனோ குடும்ப அறக்கட்டளையைச் சோ்ந்த துஷாா் குமாா் என்ற பக்தா் இத்தொகைக்கான வரைவோலையை, கூடுதல் தலைமை நிா்வாக அதிகாரி சி.எச். வெங்கையா சவுத்ரியிடம் அவா் ஒப்படைத்தாா்.