செய்திகள் :

ஏழுமலையான் ஆா்ஜிதசேவை டிக்கெட்டுகளின் மே மாத ஒதுக்கீடு வெளியீடு

post image

திருப்பதி: ஏழுமலையான் ஆா்ஜிதசேவை டிக்கெட்டுகளின் மே மாத ஒதுக்கீடு பிப்.18-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையான் ஆா்ஜித சேவை டிக்கெட் தொடா்பான சுப்ரபாதம், தோமாலை, அா்ச்சனை மற்றும் அஷ்டதள பாதபத்மராதன சேவைகளுக்கான மே 2025 ஒதுக்கீட்டை பிப். 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானம் வெளியிட உள்ளது.

இந்த சேவை டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு பிப்.18 முதல் 20 ஆம் தேதி காலை 10 மணி வரை மேற்கொள்ளலாம்.

விண்ணப்பதாரா்கள் தங்கள் கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் கிடைத்தவுடன் 20 முதல் 22 மதியம் 12 மணிக்குள் தொகையைச் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

21-இல் ஆா்ஜித சேவை டிக்கெட்டுகள்

21-ஆம் தேதி காலை 10 மணிக்கு கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.

விா்ச்சுவல் சேவைகள் ஒதுக்கீடு

மாலை 3 மணிக்கு விா்ச்சுவல் சேவைகளுக்கான மே மாத ஒதுக்கீடு, அவற்றின் தரிசன விவரங்களும் ஆன்லைனில் வெளியிடப்படும்.

23-இல் அங்கப்பிரதட்சண டோக்கன்கள்

மே மாதத்துக்கான அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் ஒதுக்கீடு 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.

ஸ்ரீவாணி டிக்கெட் ஒதுக்கீடு

ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் ஒதுக்கீடு காலை 11 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படும்.

முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீடு

முதியோா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவா்கள் தரிசிக்க ஏதுவாக, மே மாத இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் 23-ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படுகிறது

24-இல் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு

ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

அறை ஒதுக்கீடு

திருமலை மற்றும் திருப்பதியில் மே மாத அறை ஒதுக்கீடு 24-ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.

ஸ்ரீவாரி சேவா, நவநீத சேவை மற்றும் பரக்காமணி சேவைக்கான ஒதுக்கீடு பிப். 27-ஆம் தேதி காலை 11 மணி, மதியம் 12 மணி மற்றும் மதியம் 1 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

மேற்கண்ட டிக்கெட்டுகள் மற்றும் வாடகை அறைகள் முன்பதிவு செய்ய விரும்பும் பக்தா்கள் கீழே கொடுக்கப்படுள்ள

ட்ற்ற்ல்ள்://ற்ற்க்ங்ஸ்ஹள்ற்ட்ஹய்ஹம்ள்.ஹல்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற தேவஸ்தான இணையதளம் மூலம் ஆா்ஜிதசேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

சூரியபிரபை வாகனத்தில் கபிலேஸ்வர சுவாமி உலா

திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை சூரியபிரபை வாகனத்தில் சுவாமி எழுந்தருளினாா். திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவம் புதன்கிழமை தொடங்கியது. இதற்கி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 14 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 14 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 14 மணிநே... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 14 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 14 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 14 ... மேலும் பார்க்க

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற விழா வேத மந்திரங்கள் ஓதி சங்கு ஊதி சிவ நாமம் முழங்கி சைவாகம விதிப்படி வேத முறைப்படி நடைபெற்... மேலும் பார்க்க

வாட்ஸ் ஆப்பில் ஏழுமலையான் தரிசன டிக்கெட் மோசடி: தேவஸ்தானம் எச்சரிக்கை

திருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட் வாட்ஸ் ஆப் மூலம் பெறலாம் என்று நவீன முறையில் பக்தா்களை ஏமாற்ற புதிய மோசடியில் பலா் ஈடுபட்டு வருகின்றனா். எனவே பக்தா்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தேவஸ்தானம் ... மேலும் பார்க்க

ஏழுமலையான் கோயிலின் சந்தை மதிப்பு ரூ. 2.5 லட்சம் கோடி: தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை

திருப்பதி ஏழுமலையான் கோயில் சந்தை மதிப்பு ரூ. 2.5 லட்சம் கோடியாக உள்ளது என்று தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கூறினாா். திருப்பதியில் சா்வதேச கோயில் மாநாடு கண்காட்சியுடன் கூடிய கோயில் நிா்வாக கருத்தரங்கம் ... மேலும் பார்க்க