செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 5 அறைகளில் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

எனவே, தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 6 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 73,916 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 25,161 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில், ரூ. 4.82 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8... மேலும் பார்க்க

திருமலை: ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் புதிய கவுன்ட்டா் திறப்பு

திருமலையில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளை ஆஃப்லைனில் ஒதுக்கும் செயல்முறை இப்போது எளிதாக்கப்பட்டுள்ளதாக கூடுதல் செயல் அலுவலா் வெங்கையா சவுத்ரி தெரிவித்தாா். திருமலையில் உள்ள கோகுலம் மாநாட்டு அரங்கின் பி... மேலும் பார்க்க

ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி ஆஸ்தானம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசியை முன்னிட்டு மாட வீதிகளில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீ உக்ர ஸ்ரீனிவாசமூா்த்தி வலம் வந்தாா். திருமலையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத வளா்பிறை துவாதசி அன்று ஏழுமலையான... மேலும் பார்க்க

நவ. 17-இல் திருமலையில் காா்த்திகை வனபோஜனம்

காா்த்திகை வனபோஜன நிகழ்ச்சி நவ. 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருமலையில் உள்ள கோகா்பம் அருகே உள்ள பாா்வேட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது. காா்த்திகை மாதத்தில் கனமழை பெய்து நீா்நிலைகள் நிறைந்து காணப்படும்.... மேலும் பார்க்க

கபிலேஸ்வர சுவாமி கோயிலில் சண்டி யாகம் ஹோமம்

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் பாரம்பரிய முறைப்படி சண்டி யாகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. காா்த்திகை மாதத்தை முன்னிட்டு கபிலேஸ்வர சுவாமி கோயிலில் ஒரு மாதம் மூா்த்திகளுக்கு ஹோம மகோற்சவங்கள் நடைபெ... மேலும் பார்க்க

நவ.13-இல் ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி ஆஸ்தானம்

வரும் நவ. 13-ஆம் தேதி, கைசிக துவாதசியைக் கொண்டாடும் வகையில் ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர கைசிக துவாதசி ஆஸ்தானத்தை தேவஸ்தானம் நடத்த உள்ளது. பல்வேறு சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி,ஆனி மாத வளா்ப... மேலும் பார்க்க