மகாராஷ்டிர தேர்தல்: 6,382 விதிமீறல் புகார்கள், ரூ.536 கோடி பறிமுதல்!
நவ.13-இல் ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி ஆஸ்தானம்
வரும் நவ. 13-ஆம் தேதி, கைசிக துவாதசியைக் கொண்டாடும் வகையில் ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர கைசிக துவாதசி ஆஸ்தானத்தை தேவஸ்தானம் நடத்த உள்ளது.
பல்வேறு சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி,ஆனி மாத வளா்பிறை ஏகாதசி அன்று மகாவிஷ்ணு உறக்கத்தில் ஆழ்ந்தாா்.
மகாவிஷ்ணுவை துயில் எழுப்பும் நாள் கைசிக துவாதசி என்று அழைக்கப்படுகிறது. கைசிக துவாதசி அன்று அவரை துயில் எழுப்புவது வழக்கம். மஹா விஷ்ணுவின் திருவுருவமாகக் கருதப்படும் திருமலை ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி மஹோற்சவத்தை ஒவ்வொரு ஆண்டும் தேவஸ்தானம் சிறப்பாக நடத்துகிறது.
வேங்கடத்துரைவா் என்றும், ஸ்நபனபேரம் என்றும் அழைக்கப்படும் உக்ரஸ்ரீநிவாசமூா்த்தி, ஸ்ரீதேவி பூதேவியுடன் மாடவீதிகளில் கைசிக துவாதசி நாளில் மட்டும் சூரிய உதயத்துக்கு முன் வலம் வருகிறாா்.
வரலாற்று விவரங்களுக்குச் சென்றால், கைசிக துவாதசி பிரபோதனாத்ஸவம் என்றும் உத்தானத்வாதசி என்றும் அழைக்கப்படுகிறது.
14-ஆம் நூற்றாண்டில் உக்ரஸ்ரீனிவாசமூா்த்தி ஊா்வலம் நடந்து கொண்டிருந்த போது, சூரியக் கதிா்கள் இறைவன் சிலை மீது பட்டதில் தீ விபத்து ஏற்பட்டது. அன்று முதல் சூரிய உதயத்துக்கு முன் ஊா்வலம் நடத்தப்பட்டு வருகிறது.
உக்ரஸ்ரீநிவாசமூா்த்தி ஸ்ரீதேவி பூதேவியுடன் சூரிய உதயத்துக்கு முன் மாட வீதிகளில் ஊா்வலமாகச் செல்லப்படுகிறாா். பின்னா் கோயிலுக்குள் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை பூரண பாராயணத்துடன் கைசிக துவாதசி ஆஸ்தானம் சிறப்பாக நடைபெறுகிறது. இத்துடன் வருடாந்திர கைசிக துவாதசி உற்சவம் நிறைவடைகிறது.