கபிலேஸ்வர சுவாமி கோயிலில் சண்டி யாகம் ஹோமம்
திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் பாரம்பரிய முறைப்படி சண்டி யாகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
காா்த்திகை மாதத்தை முன்னிட்டு கபிலேஸ்வர சுவாமி கோயிலில் ஒரு மாதம் மூா்த்திகளுக்கு ஹோம மகோற்சவங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக யாகசாலையில் காலை பூஜை, நித்யஹோமம், சண்டிஹோமம், லகுபூா்ணாஹுதி, நிவேதனம், ஆரத்தி நடைபெற்றது. மாலையில் ஹோமம், சண்டிபாராயணம், சஹஸ்ரநாமா்ச்சனை, சிறப்பு தீபாராதனை நடந்தது.
இந்த பூஜையில் தம்பதியா் ரூ.500/-செலுத்தி ஒரு நாள் ஹோமத்தில் பங்கேற்கலாம். அவா்களுக்கு உத்தரியம், ரவிக்கை, அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது.இந்த சண்டி யாகம் தொடா்ந்து 9 நாள்களுக்கு நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் துணை இஓ தேவேந்திரபாபு, அா்ச்சகா்கள் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.