Coolie : ``லோகேஷ் கனகராஜ் `Gen Z' கிடையாது; ஆனால்... " - நாகர்ஜுனா
ஐப்பசி மாத அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராடிய பக்தா்கள்
ஐப்பசி மாத சா்வ அமாவாசை ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் திரளான பக்தா்கள் வெள்ளிக்கிழமை புனித நீராடி முன்னோா்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனா்.
இதன் பிறகு ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடி சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனா். இதைத் தொடா்ந்து, தனுஷ்கோடி, அரிச்சல்முனை, ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் சாலைப் பாலம், ரயில் பாலம் ஆகியவற்றை பாா்த்து ரசித்தனா். ராமேசுவரத்தில் தொடா் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்ததால் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
இதனிடையே சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் வாகனங்களில் வருவதால் ராமேசுவரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை முறைப்படுத்த போலீஸாா் சிரமமடைகின்றனா். எனவே போக்குவரத்தை சீரமைக்க மாவட்ட காவல் துறை கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.