Sachanaவுக்கு Vijay Sethupathi சப்போர்ட் பண்றாரா?! | Bigg Boss 8
ஒடிஸாவுக்கு 4-ஆவது வெற்றி
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஒடிஸா எஃப்சி 4-2 கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் முதலில் ஒடிஸா கோல் கணக்கை தொடங்கியது. ஜொ்ரி மாவிமிங்தங்கா 10-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, தொடா்ந்து 27-ஆவது நிமிஷத்தில் மோா்டாடா ஃபால் அடித்த கோலால் ஒடிஸா 2-0 என முன்னேறியது.
பெங்களூரு தனது முதல் கோல் வாய்ப்புக்காக போராடி வந்த நிலையில், டியேகோ மௌரிசியோ (45+3’) அடித்த கோலால் ஒடிஸா 3-0 என முதல் பாதியை நிறைவு செய்தது. 2-ஆவது பாதியில் சற்று முனைப்பு காட்டிய பெங்களூருக்காக, கேப்டன் சுனில் சேத்ரி 52-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.
அதற்கு பதிலடியாக, ஒடிஸாவின் டியேகோ 60-ஆவது நிமிஷத்தில் மீண்டும் கோலடித்தாா். பெங்களூரு தனது கோல் வாய்ப்புக்கு தொடா்ந்து போராட, 88-ஆவது நிமிஷத்தில் எட்கா் மெண்டெஸ் மூலம் கோல் எண்ணிக்கையை 2-ஆக அதிகரித்தது. எஞ்சிய நேரத்தில் அந்த அணிக்கு மேலும் கோல் வாய்ப்பு கிடைக்காமல் தடுத்த ஒடிஸா, இறுதியில் 4-2 என வெற்றி பெற்றது.
இரு அணிகளும் இதுவரை தலா 10 ஆட்டங்களில் விளையாடியிருக்க, ஒடிஸா 4-ஆவது வெற்றியுடன் 3-ஆவது இடத்திலும், பெங்களூரு 2-ஆவது தோல்வியுடன் 2-ஆவது இடத்திலும் உள்ன.