அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்: எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்
ஒன்ஸ் மோர் - புதிய பாடல் வெளியானது!
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ்ம் அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் புதிய படம் ஒன்ஸ் மோர்.
நவீன கால இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஹிருதயம், குஷி (தெலுங்கு) படங்களுக்கு ஹெஷேம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் படத்தின் டீசர் மற்றும் இதயம், வா கண்ணம்மா போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்ற நிலையில் தற்போது ’எதிரா புதிரா?’ எனும் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுதிய இந்தப் பாடலை சத்ய பிரகாஷ் பாடியுள்ளார்.
ஒன்ஸ் மோர் திரைப்படம் வருகிற மே மாதம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.