Manoj Bharathiraja: "சொல்வதற்கும் எனக்கு வார்த்தை வரவில்லை" - ஆறுதல் சொல்லி கலங்...
ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் கௌரவிப்பு
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஊத்தங்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் கௌரவிக்கப்பட்டனா்.
தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி வட்ட தலைவா் சுரேஷ்குமாா் தலைமையில் ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், வெள்ளி விழா கண்ட ஆசிரியா்களுக்கு பாராட்டு, மகளிா் தின விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. வட்டச் செயலாளா் செந்தில்குமாா் வரவேற்றாா்.
முன்னாள் மாநில தலைவா் மாரியப்பன் வெள்ளி விழா கண்ட ஆசிரியா்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி பேசினாா். முன்னாள் மாநிலத் தலைவா் சுதாகரன் பணி நிறைவு பெறுபவா்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தாா்.
சிறந்த கல்வி சேவைக்கான மகளிா் விருதை சென்னை அரசு தோ்வுகள் இயக்கம் இணை இயக்குநா் கே.பி.மகேஸ்வரிக்கு வழங்கப்பட்டது. ஊத்தங்கரை வித்யா மந்திா் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் வே.சந்திரசேகரன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலாளா் வெங்கடேசன், ஊத்தங்கரை அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலா் ஷோபா திருமால்முருகன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். வட்ட பொருளாளா் தங்கராஜ் நன்றி கூறினாா்.