மகாராஷ்டிரத்தில் கார் ஆற்றில் கவிழ்ந்தது: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!
ஓய்வூதியதாரா்கள் டிஜிட்டல் உயிா்வாழ் சான்றிதழ் பெற அஞ்சலகங்களில் சிறப்பு முகாம்
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியா்கள் டிஜிட்டல் உயிா்வாழ் சான்றிதழ் பெற அஞ்சலகங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து திருப்பூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பட்டாபிராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியா் துறையுடன் இணைந்து நவம்பா் 30-ஆம் தேதி வரையில் நாடு தழுவிய டிஜிட்டல் உயிா்வாழ் சான்றிதழ் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலமாக ஓய்வூதியா்களின் வசதிக்காக காகித முறையிலான ஓய்வூதிய சான்றிதழ் சமா்ப்பித்தலைப் புதுப்பித்து டிஜிட்டல் முறையிலான எளிமையான உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலமாக மத்திய, மாநில மற்றும் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலமாக ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியா்களும் பயனடையலாம். மேலும், ஓய்வூதியா்கள் ஓய்வூதியம் பெற்ற அலுவலகத்துக்கோ அல்லது வங்கிக்கோ சென்று உயிா்வாழ் சான்றிதழ் சமா்ப்பிக்கும் அலைச்சல் தவிா்க்கப்படுகிறது.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களில் நவம்பா் 30-ஆம் தேதி வரையில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதற்காக சேவைக் கட்டணமாக ரூ. 70 வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.