கடந்த 10 ஆண்டுகளில் 400 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி!
கடந்த 10 ஆண்டுகளில் ஒடிசா மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்த 400 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் கணேஷ்ராம் சிங்குந்தியா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த ஒருவார காலமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், அவையின்போது புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி பாஜக எம்ஏல்ஏ தங்கதர் எழுப்பிய கேள்விக்கு தொழில்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.
கடந்த 2015 முதல் நவம்பர் 2024 வரையிலான காலகட்டத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பிற மாநிலங்களில் இறந்துள்ளனர்.
அதிகபட்சமாக கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த 59 பேரும், அதைத்தொடர்ந்து கலஹன்டி 39, போலங்கிர் 35, கந்தமால் 32 மற்றும் ராயகடா 28 ஆகியவை ஆகும்.
மேலும், 2014ல் ஒடிசாவிலிருந்து 26,397 தொழிலாளர்கள் இடம்பெயர்ந்ததாகவும், அரசு 388 உரிமங்கள் வழங்கியுள்ளது. அதேபோன்று 2024ல் மட்டும் ஒடிசாவிலிருந்து 60,683 தொழிலாளர்கள் இடம்பெயர்ந்ததற்காக 883 உரிமங்கள் வழங்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.
துணை முதல்வர் கே.வி. சிங் தியோ தலைமையில் ஒரு உயர்மட்ட பணிக்குழுவை அமைத்து இடம்பெயர்வு பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.