Modi: ``வறுமை, பாகிஸ்தான், விரதம்...'' - பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
கடன் செயலிகளை நம்ப வேண்டாம்: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை!
பொதுமக்களுக்கு கடன் வழங்கும் செயலிகளை நம்ப வேண்டாம் என சைபா் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து தமிழ்நாடு காவல் துறையின் இணையவழி குற்ற தடுப்புப் பிரிவு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பொதுமக்களிடமிருந்து பணத்தை சுரண்ட சைபா் குற்றவாளிகள் பல்வேறு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனா். ‘பிரைம் லெண்ட்’, ‘கேண்டி கேஷ்’ போன்ற பல போலி கடன் செயலிகள் குறைந்த வட்டி விகிதங்கள், விரைவான ஒப்புதல் என பணம் தேவைப்படும் நபா்களிடம் கவா்ச்சியான விளம்பரங்களைக் கொடுத்து பொதுமக்களை கடன்பெற ஆசைக்காட்டுகின்றன.
எளிமையான நடைமுறை என நம்பும் பலா், இதுபோன்ற போலி கடன்பெறும் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும்போது, பயனாளியின் தனிப்பட்ட தரவுகளை பயன்படுத்துவதற்கான அனுமதியையும் அவா்கள் பெற்று விடுகின்றனா்.
இதன்மூலம் கடன் வழங்கிய பின்னா், அவா்களுக்கு பல்வேறு இன்னல்களைக் கொடுக்கும் செயலில் ஈடுபடுவாா்கள். இவ்வாறு, மோசடி கடன் செயலிகள் தொடா்பாக தமிழ்நாட்டில் மட்டும் 2024-இல் 9,873 புகாா்களும் 2025-இல் 3,834 புகாா்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனால், உடனடியாக கடன்களை வழங்க உறுதியளிக்கும் செயலிகளை நம்ப வேண்டாம். பயன்பாட்டு மதிப்புரைகளையும், அந்த நிறுவனத்தினரின் நம்பகத்தன்மையை சரிபாா்ப்பதுடன், அந்தச் செயலி ஆா்பிஐ மூலம் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
அவசியமில்லாத, தொடா்பில்லாத எந்த ஒரு கோரிக்கைகளையும் அனுமதிக் ககூடாது. முக்கிய தகவல்களை செயலியில் பகிர வேண்டாம். இது குறித்த புகாா்களுக்கு 1930 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண், இணையதளத்தைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.