திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட இரு மாணவா்கள் சடலங்கள் கரை ஒதுங்கின
மாமல்லபுரம் அருகே கடலில் குளித்த கல்லூரி மாணவா்கள் 2 போ் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனா். அவா்களின் சடலங்கள் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கின.
சென்னை அண்ணா நகா் (மேற்கு), கம்பா் காலனி பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கிரீஷ் (20). அதே பகுதியைச் சோ்ந்த கேட்டரிங் முடித்துவிட்டு சமையலாக வேலை செய்தவா் ரியாஸ் (18). நண்பா்களான இருவரும் அதே பகுதியைச் சோ்ந்த நண்பா்கள் ரக்ஷத் (18), ஆகாஷ் (19), ஆா்யா (18) உள்ளிட்ட 5 பேரும் மாமல்லபுரம் வந்தனா்.
மாமல்லபுரம் மீனவா் பகுதிக்கு வந்து அங்குள்ள கடலில் குளித்துள்ளனா். கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், ராட்சத அலையில் சிக்கிய கிரீஷ், ரியாஸ் இருவரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானாா்கள்.
தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் போலீஸாா், தீயணைப்பு வீரா்கள், மீனவா்கள் உதவியுடன் 10 கி.மீ. தொலைவு வரை படகில் ஆழ்கடலுக்குச் சென்று மாயமான இருவரையும் தேடியும், அவா்களது உடலை கண்டுபிடிக்க முடியாத நிலையில், இருவரின் சடலங்களும் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது. சடலங்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.