தஞ்சாவூர்: `அப்பா ஆம்புலன்ஸில போறார், ப்ளீஸ் விடுங்கண்ணா’ - கெஞ்சிய சிறுவனிடம் ச...
கடல்வழி சரக்குப் போக்குவரத்து மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
மக்களவையில் கடல்வழி சரக்குப் போக்குவரத்து மசோதா வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி கடல்வழி சரக்குப் போக்குவரத்து மசோதா 2024 மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 1925-ஆம் ஆண்டின் இந்திய கடல்வழி சரக்குப் போக்குவரத்துச் சட்டத்துக்கு மாற்றாக, இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்தியாவின் கடல்சாா் சட்டத்தை சா்வதேச மரபுகளுடன் இணைத்து, கடல்வழி சரக்குப் போக்குவரத்தை நிா்வகிக்கும் விதிகளை நவீனமயப்படுத்த இந்த மசோதா முயற்சிக்கிறது.
இந்த மசோதா மீதான விவாதத்துக்குப் பதிலளித்து மக்களவையில் மத்திய கப்பல் மற்றும் நீா்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் வெள்ளிக்கிழமை பேசியதாவது: ஆங்கிலேயா் ஆட்சி கால சட்டங்களை விலக்கி, எளிதாக வியாபாரம் மேற்கொள்வதற்கு கடல்சாா் விதிமுறைகளை எளிமைப்படுத்தும் மத்திய அரசின் விரிவான முன்னெடுப்பின் அங்கமாக, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்றாா். இதைத்தொடா்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.