குளிா்கால கூட்டத் தொடரில் வக்ஃப் உள்பட 16 மசோதாக்கள்: பட்டியலிட்டது மத்திய அரசு
கடையநல்லூா் அருகே வனப்பகுதிக்குள் யானைகளை விரட்டும் பணி
கடையநல்லூா் வனச்சரகத்திற்குள்பட்ட வடகரை பகுதியில் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினா் ஈடுபட்டனா்.
மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவாரத்தில் வடகரை பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து சேதப்படுத்தினவாம். இதையடுத்து வனச்சரகா் சுரேஷ் தலைமையில் வனவா் முருகேசன், வனக்காப்பாளா்கள் ஜோஸ்வா, சஜிந்திரன், பிரதீப், சுகந்தி, வனக்காவலா்கள் ஜெயசீலன், மாணிக்கம் மற்றும் வேட்டை தடுப்பு காவலா்கள், விவசாயிகள் அடங்கிய குழுவினா் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.