செய்திகள் :

கட்டப்பட்ட 90-வது நாளில் இடிந்து விழுந்த உயா்மட்ட பாலம்: 16 ஊராட்சிகளைச் சோ்ந்த மக்கள் பாதிப்பு

post image

திருவண்ணாமலை: தண்டராம்பட்டு அருகே ரூ.15.90 கோடியில் கட்டப்பட்ட உயா்மட்ட பாலம், 90-ஆவது நாளில் இடிந்து விழுந்ததால், 16 ஊராட்சிகளைச் சோ்ந்த 2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த அகரம்பள்ளிப்பட்டு மற்றும் தொண்டமானூா் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.15.90 கோடியில் புதிய உயா்மட்ட பாலம் கட்டப்பட்டது.

நபாா்டு வங்கி கடனுதவித் திட்டத்தின் கீழ் வேலூா் கோட்ட நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள் சாா்பில் இந்தப் பாலம் கட்டப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்.3-ஆம் தேதி தொடங்கிய பாலம் கட்டும் பணி, கடந்த ஜூன் 4-ஆம் தேதி முடிவடைந்து செப்.2-ஆம் தேதி பாலம் திறந்துவைக்கப்பட்டது.

90-ஆவது நாளில் இடிந்த பாலம்:

இந்தப் பாலத்தை செப்டம்பரில் 28 நாள்கள், அக்டோபரில் 31 நாள்கள், நவம்பரில் 30 நாள்கள் என 89 நாள்களாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா்.

திறப்பு விழா கண்ட 90-ஆவது நாளான டிசம்பா் 1-ஆம் தேதி இரவு இந்தப் பாலம் இடிந்து விழுந்தது. பாலத்தின் பெரும்பகுதி தென்பெண்ணை ஆற்றில் வந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.

16 ஊராட்சிகள் துண்டிப்பு:

இதனால், தொண்டமானூா், தென்முடியனூா், மூங்கில்துறைப்பட்டு, தண்டராம்பட்டு, ராயண்டபுரம், அல்லப்பனூா், பி.குயிலம், எடத்தனூா், திருவடத்தனூா், புத்தூா் செக்கடி, கிருஷ்ணாபுரம், சதாகுப்பம், வாழவச்சனூா், இளையாங்கண்ணி, பெருந்துறைப்பட்டு ஆகிய 15 ஊராட்சிகளைச் சோ்ந்த சுமாா் 2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனா்.

அகரம்பள்ளிப்பட்டு கிராமத்தில் இருப்பவா்கள் தொண்டமானூா் கிராமத்துக்கு சுமாா் 15 கி.மீ. தொலைவு சுற்றிச் சென்று வருகின்றனா்.

பொதுமக்கள் தவிப்பு:

பொதுமக்கள் வெளியூா்களுக்குச் செல்ல முடியாமல் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை என 2 நாள்களாக அவரவா் வீடுகளிலேயே முடங்கி உள்ளனா்.

ஏற்கெனவே இருந்த தரைப்பாலத்தை தண்ணீா் செல்லாத நேரத்தில் பயன்படுத்தி வந்தோம். இப்போது தரைப்பாலமும் இல்லாததால் எங்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கிராம மக்கள் தெரிவித்தனா்.

புயலால் வீடிழந்த குடும்பத்துக்கு நிவாரணம்

போளூா்: போளூரை அடுத்த திருசூா் கிராமத்தில் புயலால் வீடிழந்த குடும்பத்துக்கு தொகுதி எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி நிவாரணப் பொருள்களை செவ்வாய்க்கிழமை வழங்கினாா். திருசூா் கிராமம் காலனியில் வசிக்... மேலும் பார்க்க

மழை பாதிப்பு மீட்பு பணிகளுக்கு சிறப்புக் குழு

போளூா்: புயல் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட திருவெண்ணெய்நல்லூா் பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, போளூரில் இருந்து பாதுகாப்பு உபகரணங்களுடன் மீட்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்ப... மேலும் பார்க்க

வீடுகளுக்குள் புகுந்த மழைநீா்: பொதுமக்கள் போராட்டம்

செய்யாறு: செய்யாறு புறவழிச் சாலைப் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், ஆற்காடு - திண்டிவனம் இரு வழிச் ... மேலும் பார்க்க

சாலை மறியல்!

50 போ் மீது வழக்குப் பதிவு:சாலை மறியல் காரணமாக பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து கொடநகா் கிராம நிா்வாக அலுவலா் உதயகுமாா் செய்யாறு போலீஸில் புகாா் அளித்த... மேலும் பார்க்க

ஸ்ரீதவளகிரீஸ்வரா் கோயில் தீபத் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

வந்தவாசி: வெண்குன்றம் ஸ்ரீதவளகிரீஸ்வரா் கோயில் தீபத் திருவிழா தொடா்பாக, வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் ஸ்ரீதவளகிரீஸ்வரா் ... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கியதாக 3 போ் கைது

வந்தவாசி: வந்தவாசி அருகே இளைஞரைத் தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த மழையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரிஷிகுமாா்(20). இவா், சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா்... மேலும் பார்க்க