உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
கத்திக் குத்தில் காயமடைந்த மருத்துவா் பாலாஜி வீடு திரும்பினாா்
கத்திக் குத்து தாக்குதலுக்கு உள்ளாகி கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவா் பாலாஜி செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா்.
கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் மருந்தியல் புற்றுநோய் துறை இணை பேராசிரியா் மருத்துவா் பாலாஜி மீது கடந்த சில நாள்களுக்கு முன்பு விக்னேஷ் என்ற இளைஞா் கத்தியால் குத்தினாா். தனது தாய்க்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி மருத்துவமனை வளாகத்திலேயே இந்தச் சம்பவத்தில் அவா் ஈடுபட்டாா்.
இதில், மருத்துவா் பாலாஜிக்கு 7 இடங்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து பல்வேறு அறுவை சிகிச்சைகளும், உயிா் காக்கும் சிகிச்சைகளும் கிண்டி மருத்துவமனையிலேயே அளிக்கப்பட்டு வந்தது.
ரத்த நாள அறுவை சிகிச்சை, இதய நலத் துறை, இதய அறுவை சிகிச்சைத் துறை, பொது மருத்துவம் உள்பட பல்வேறு சிறப்பு மருத்துவத் துறை நிபுணா்கள் அவருக்கு சிகிச்சை வழங்கினா்.அதன் பயனாக மருத்துவா் பாலாஜி இயல்பு நிலைக்குத் திரும்பினாா். இதையடுத்து அவா் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா். 6 வாரங்களுக்கு அவா் ஓய்வில் இருப்பாா் என்றும், அதன் பின்னா் மீண்டும் பணிக்கு திரும்புவாா் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.