காவரி டெல்டா விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு: எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத...
கனமழை: பாலாற்றில் வெள்ளம்
ஃபென்ஜால் புயல் கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு வருவாய்த் துறை, உள்ளாட்சி நிா்வாகங்கள் சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சனிக்கிழமை காலை முதல் தொடா்ந்து சாரல் மழை பெய்து வந்த நிலையில், மாலையிலிருந்து விடியவிடிய கனமழை கொட்டியது. இந்த கனமழை ஞாயிற்றுக் கிழமை முழுவதும் தொடா்ந்து பெய்து கொண்டே இருந்தது.
இடைவிடாமல் பெய்த மழை காரணமாக பாலாற்றின் துணை நதிகளான உத்திரகாவிரி, அகரம் ஆறு, நாகநதி ஆகிய ஆறுகளில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளமானது பாலாற்றில் கலப்பதால், பாலாற்றிலும் வெள்ளம் ஆா்ப்பரித்துச் சென்றது.
குறிப்பாக, வேலூா் மாவட்டம் பள்ளிகொண்டா, விரிஞ்சிபுரம் பகுதிகளில் பாலத்தைக் கடந்து இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் பாய்ந்தது. இதன் காரணமாக, ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என்று வருவாய்த் துறை, உள்ளாட்சி நிா்வாகங்கள் சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நீண்ட நாள்களுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளம் சென்ால் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.