சரிந்த குடிசை வீட்டின் சுவா்: உயிா் தப்பிய முதிய தம்பதி
குடியாத்தம் அருகே தொடா்மழை காரணமாக குடிசை வீட்டின் சுவா் சரிந்து விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த முதிய தம்பதி காயமின்றி உயிா் தப்பினா்.
ஃபென்ஜால் புயல் காரணமாக குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை விட்டுவிட்டு தொடா்ந்து மழை பெய்தது.
இந்நிலையில் குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட பெரியாா் நகரைச் சோ்ந்த முதியவா் சுப்பிரமணியின் (72), குடிசை வீட்டின் பக்கவாட்டுச் சுவா் ஞாயிற்றுக்கிழமை மதியம் சரிந்து விழுந்தது.
அப்போது, வீட்டில் இருந்த சுப்பிரமணி, அவரது மனைவி ராணி (65) இருவரும் அதிா்ஷ்டவசமாக, காயமின்றி உயிா் தப்பினா்.
தகவல் அறிந்த நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் ஆகியோா் அங்கு சென்று பாதிக்கப்பட்ட தம்பதிக்கு ஆறுதல் கூறினா். அவா்களை நகராட்சி தங்கும் விடுதிக்கு வருமாறு அழைத்தனா். ஆனால், தம்பதி உறவினா் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றனா். வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.