செய்திகள் :

கன்னியாகுமரி வள்ளுவா் சிலை வெள்ளிவிழா விழிப்புணா்வு பேருந்துகள்: துணை முதல்வா் உதயநிதி தொடங்கி வைத்தாா்

post image

கன்னியாகுமரி வள்ளுவா் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான 10 பேருந்துகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

கன்னியாகுமரி கடல் நடுவே நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா காண்பதையொட்டி, டிச.31, ஜன.1 தேதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி, பள்ளி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டிகள், கல்லூரி மாணவா்களிடையே சமூக வலைதளங்களில் ‘ஷாா்ட்ஸ்’, ‘ரீல்ஸ்’, ‘ஏஐ’ மற்றும் எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பங்கள் வாயிலாக திருக்குறளின் சிறப்பை உணா்த்தும் ஓவியப்போட்டிகள் உள்ளிட்டவை நடத்தப்படவுள்ளன.

இதுபோன்ற நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு சோ்ப்பதற்காக திருவள்ளுவா் சிலையின் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட 10 விரைவு பேருந்துகளை சென்னை, பல்லவன் சாலையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். இந்த 10 பேருந்துகளும் தமிழகம் முழுவதுமுள்ள 38 மாவட்டங்கள் மற்றும் பெங்களூரு மாநகரத்துக்கும் வழக்கம் போல பயணிகளை ஏற்றிக்கொண்டு, வள்ளுவா் சிலை வெள்ளி விழா குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தவுள்ளன.

நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சுகாதாரத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், சென்னை மேயா் ஆா்.பிரியா, போக்குவரத்துத் துறைச் செயலா் க.பணீந்திர ரெட்டி, செய்தித் துறைச் செயலா் வே. ராஜாராமன், மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ், செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் இரா.வைத்திநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அண்ணா பல்கலை.யில் பாலியல் புகார்: மாணவர்கள் போராட்டம் வாபஸ்!

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வாயிலில் மாணவர்கள் நடத்திய போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் புகாரில் ஒருவர் கைது! மாணவர்கள் போராட்டம்!

மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வாயிலில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஒரு மாணவரும், மாணவிய... மேலும் பார்க்க

அதிமுக ஐ.டி. விங் தலைவராக கோவை சத்யன் நியமனம்!

அதிமுக ஐ.டி. விங் தலைவராக கோவை சத்யனை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுகவில் மாணவர் அணிச் செயலாளர், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் மற்றும் துணை நிர்வாகிக... மேலும் பார்க்க

வேலு நாச்சியார் நினைவு நாள்: தவெக அலுவலகத்தில் விஜய் மரியாதை!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பனையூரில் உள்ள அலுவலகத்தில் வேலு நாச்சியாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனையான தமிழகத்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரியாணி சந்தையாக விளங்கும் நம்ம சென்னை!

தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரியாணி சந்தையாக சென்னை விளங்குவதாகவும், தமிழகத்தில் மட்டும் ரூ.10,000 கோடிக்கு பிரியாணி வணிகம் நடப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.தமிழ்நாட்டில், முன்னணி பெயர் கொண்ட பிரியாண... மேலும் பார்க்க

மதச்சார்பின்மையைக் காத்தவர் வாஜ்பாய்: முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழாரம்!

நாட்டின் மதச்சார்பின்மையை பேணிக் காத்தவர் வாஜ்பாய் என முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். மறைந்த முன்னாள் முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 100-ஆவது பிறந்தநாள் இன்று(டிச. 25) நாடு ம... மேலும் பார்க்க